சினிமா செய்திகள்

'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் - புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவரும் விஷால்

நடிகர் விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. பான் இந்தியா படமாக தயாராகும் இந்த படத்தில் நடிகை ரிது வர்மா விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் படப்பிடிப்பின் போது விஷாலுக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு கோடையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்று நடிகர் விஷால் தன்னுடைய 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

பர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஷால் வித்தியாசமான தோற்றத்தில் அடர்ந்த தாடியோடு கைகளில் துப்பாக்கியுடன் காட்சியளிக்கிறார். விஷாலின் இந்த புதிய தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து