சினிமா செய்திகள்

நடிகை அஞ்சலிக்கு திருமணம்

தினத்தந்தி

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு திரையுலகில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகர் ஜெய்யை அஞ்சலி காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதனை அவர் மறுத்தார். பின்னர் பிரபல இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பேசினர். இந்த தகவலில் உண்மை இல்லை என்று அஞ்சலி கண்டித்தார். தற்போது மீண்டும் திருமணபேச்சு கிளம்பி உள்ளது. அஞ்சலியின் பெற்றோர் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள அஞ்சலியும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் பேசப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இந்த தகவலுக்கு முன்பு போல் அஞ்சலி மறுப்பு சொல்லாமல் மவுனமாக இருப்பதால் உண்மையாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்ப தொடங்கி உள்ளனர். தற்போது ராம்சரணுடன் ஷங்கர் என்ற தெலுங்கு படத்தில் அஞ்சலி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து