சினிமா செய்திகள்

கவினின் “மாஸ்க்” படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

கவின், ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மாஸ்க்’ படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது.

தினத்தந்தி

அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் மாஸ்க் படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில், மாஸ்க் படத்தின் 2வது பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதுதான் எங்கள் உலகம் பாடல் நாளை மாலை5 மணிக்கு வெளியாகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து