சினிமா செய்திகள்

மையல் கொண்டேன்... நானி படத்தின் புதிய பாடல் வெளியானது..!

'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். அப்பா, மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்துக்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி 'மையல்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடலை கால பைரவா, சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது