சினிமா செய்திகள்

மாயோன், சாமி படம் அல்ல; அதைத்தாண்டி நிறைய இருக்கிறது - சிபி சத்யராஜ்

‘‘மாயோன், சாமி படம் அல்ல. அதைத்தாண்டி நிறைய இருக்கிறது’’ என்று படத்தின் கதாநாயகன் சிபி சத்யராஜ் கூறினார்.

''சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் 'மாயோன்' படத்தில் முதன்முதலாக ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இது, மாறுபட்ட திரைக்கதையுடன் கடவுள், அறிவியல், சிலை கடத்தல், புதையல் வேட்டை என பரபர திகில் படமாக தயாராகி வருகிறது. படத்தின் திரைக்கதையை தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அமைத்துள்ளார்'' என்கிறார், அந்தப் படத்தின் டைரக்டர் என்.கிஷோர்.

இவர் மேலும் கூறும்போது...

''இந்தப் படத்தின் திரைக்கதை ஒரு புதிய களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள நடிகர்-நடிகைகள் அனைவரும் பொருத்தமாக அமைந்தார்கள். எல்லோரும் சேர்ந்து நிறைய உழைத்து இருக்கிறோம்.

இசையமைப்பாளராக இளையராஜா கிடைத்தது, வரம். படத்தின் கதை, இந்தியா முழுக்க எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய கதை'' என்றார்.

''இண்டியானா ஜோன்ஸ், டாவின்சி கோட் படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுபோன்ற ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்ற என் நீண்டகால ஆசை, இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியது. இது, சாமி படம் அல்ல. அதைத்தாண்டி நிறைய இருக்கிறது'' என்று படத்தின் கதாநாயகன் சிபி சத்யராஜ் கூறினார்.

''மாயோன் படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது'' என்று கதாநாயகி தான்யா ரவிச்சந்திரன் சொன்னார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்