மீ டூ விவகாரம் நாட்டையே உலுக்கி வருகிறது. டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மீது இந்தி நடிகைகள் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் நானா படேகர் மீது தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார். பாலியல் புகாரில் சிக்கிய இயக்குனர்கள் படங்களில் நடிக்க மறுத்து அக்ஷய்குமார், அமீர்கான் ஆகியோர் விலகி உள்ளனர். தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா மீ டூ குறித்து அளித்த பேட்டி வருமாறு:-