சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்க வந்த மீரா ஜாஸ்மின் மகிழ்ச்சி

தினத்தந்தி

மீரா ஜாஸ்மின் மலையாள திரையுலகில் 2001-ல் அறிமுகமாகி அடுத்த வருடமே மாதவன் ஜோடியாக ரன் படம் மூலம் தமிழுக்கு வந்தார். ரன் அவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்து பட வாய்ப்புகள் வரிசை கட்டின. முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார். சுமார் 10 வருடங்கள் தமிழ் படங்களில் மீரா ஜாஸ்மின் நடிக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க வந்து இருக்கிறார். தற்போது தமிழில் விமானம் என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்துள்ளார். அடுத்து மாதவனுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். மேலும் சில படங்களில் நடிக்கவும் பேசி வருகிறார்கள்.

மீரா ஜாஸ்மின் அளித்துள்ள பேட்டியில், "நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விமானம் படத்தின் கதையை கேட்டதும் பிடித்து போனது. அதனால் அதில் நடித்தேன். நான் எப்போதும் சினிமாவின் கதை, அதில் எனக்கு உள்ள கதாபாத்திரம் ஆகிய இரண்டு விஷயங்களை மட்டும்தான் மனதில் வைத்து இருப்பேன். இரண்டும் பிடித்து போனால் நடிப்பேன். விமானம் படத்தின் கதையையும் அப்படித்தான் தேர்வு செய்தேன்" என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து