சினிமா செய்திகள்

சினிமாவை விட்டு விலகும் மெஹ்ரின்

தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படம் முலம் அறிமுகமானவர் மெஹ்ரின். தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுசின் பட்டாஸ் படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தினத்தந்தி

தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படம் முலம் அறிமுகமானவர் மெஹ்ரின். தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுசின் பட்டாஸ் படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். மெஹ்ரினுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளது. அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை மணக்கிறார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா? மாட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்தநிலையில் சினிமாவை விட்டு விலக மெஹ்ரின் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவருக்கு நெருக்கமானவர் கூறும்போது, திருமணத்துக்கு பிறகு கணவருடன் டெல்லியில் குடியேற மெஹ்ரின் திட்டமிட்டு உள்ளார். சினிமாவை விட்டு ஒதுங்கவும் முடிவு செய்து இருக்கிறார். புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. தற்போது வருண் தேஜாவுடன் நடிக்கும் தெலுங்கு படமே அவரது கடைசி படமாக இருக்கும் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து