சினிமா செய்திகள்

'இல்லத்தார்க்கு உகந்த திரைப்படம்' - 'மெய்யழகன்' படத்திற்கு 'யு' சான்றிதழ்

’மெய்யழகன்' படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கி இருக்கிறது

தினத்தந்தி

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படமான மெய்யழகன் படத்தை '96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கி இருக்கிறார். அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

கோவிந்த் வசந்தா இசையமைக்க மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். இது கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையேயான உறவின் மகத்துவத்தைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது

இந்நிலையில், மெய்யழகன் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'இல்லத்தார்க்கு உகந்த தடையில்லா பொதுக்காட்சித் திரைப்படம்' என்று பதிவிட்டு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கி இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து