சினிமா செய்திகள்

உடல்நிலையை கவனிக்காததால் பிரதமர் என்னை கடிந்து கொண்டார் : நிதின் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி

தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான 'யாகாவா ராயினும் நாகாக்க' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நிதின் சக்ரவர்த்தி நடித்து இருந்தார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

கடந்த பிப்ரவரி 10-ம் தேதி காலை 10.30 மணியளவில் கடுமையான நெஞ்சுவலி காரணமாக நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், அவர் இன்று பிற்பகல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் அவர் நலமாக இருப்பதாகவும் விரைவில் படங்களின் நடிக்க தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை, நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன். எனது உணவுப் பழக்கத்தை நான் கட்டுப்படுத்த வேண்டும். நான் விரைவில் எனது வேலையைத் தொடங்கவுள்ளேன்" என்று கூறினார்.

மேலும் நேற்று பிரதமர் மோடி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலையை கவனிக்காததற்காக கடிந்து கொண்டதாக மிதுன் சக்கரவர்த்தி கூறினார்.

அறிமுக படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது

கடந்த 1966ம் ஆண்டு பெங்காலியில் வெளியான 'மிரிகயா'என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி சினிமா துறையில் அறிமுகமானார். அறிமுக படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று நாட்டையே திரும்பி பார்க்க வைத்தார். இந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தார். இவர் தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான 'யாகாவா ராயினும் நாகாக்க' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எம்.பி. யாகவும் மிதுன் சக்கரவர்த்தி இருந்து வந்துள்ளார். பின்னர், சாரதா நிதி நிறுவன மேசடியில் சிக்கினார். அதை தெடர்ந்து எம்.பி- பதவியை மிதுன் சக்கரவர்த்தி ராஜினாமா செய்தார். கடந்த 2021ம் ஆண்டு முதல் அவர் பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ள மிதுன் சக்கரவர்த்தி கடந்த மாதம் ஜனாதிபதியிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்