பெங்களூர்
தமிழில் மத்திய சென்னை படத்தில் நடித்தவர் நடிகை ரம்யா பர்னா, கன்னட நடிகையான இவர் பல கன்னட படங்களில் நடித்துள்ளார்.
பெங்களூரில் வசித்து வந்த ரம்யா ஜனதா தளம் (எஸ்) கட்சி பிரமுகர் அப்துல் என்பவரின் மகனான பகாத் அலிகானை ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. பகாத், ரம்யாவை விட இரண்டு வயது சிறியவர்.
இதுகுறித்து ரம்யா கூறுகையில், பகாத் அலிகானை பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளேன், எனது தாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் உடல் நலம் சரியானவுடன் எங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம் என கூறியுள்ளார்.