சினிமா செய்திகள்

நான் கடவுள் ராஜேந்திரன் நடித்துள்ள ராபின்ஹுட் பட டிரைலர் வெளியானது...!

கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் நடிகர் ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ராபின்ஹுட்.

பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராஜேந்திரன். பின்னர், வில்லன், காமெடி உள்பட பல்வேறு கதாப்பாத்திரங்களில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவருக்கு மொட்டை ராஜேந்திரன் என புனைப்பெயரும் உண்டு.

இதனிடையே, டைரக்டர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் நடிகர் ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். காமெடியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர்கள் மனோகர் , சதீஷ், முல்லை உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ராபின்ஹுட் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லரை டைரக்டர் எச்.வினோத் வெளியிட்டார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...