சினிமா செய்திகள்

விவாகரத்து வதந்தியில் சிக்கிய ’நாகினி’ நடிகை... இதுதான் காரணமா?

இதுகுறித்து மௌனி ராய் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.

மும்பை,

பிரபல நடிகை மௌனி ராய் மற்றும் அவரது கணவர் சூரஜ் நம்பியார் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் 'அன்பாலோ' செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இவர்களின் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மௌனி ராய் மற்றும் சூரஜ் நம்பியார் இருவரும் 2019-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் துபாயில் முதன்முதலாக சந்தித்தனர். அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி, 2022 ஜனவரியில் கோவாவில் உள்ள ஹில்டன் ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். மலையாள மற்றும் பெங்காலி பாரம்பரிய முறைகளில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மௌனி ராய், 'நாகினி' சீரியல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். பின்னர் 'பிரம்மாஸ்திரா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சூரஜ் நம்பியார், துபாயில் முதலீட்டு வங்கி அதிகாரியாகவும் (Investment Banker) தொழிலதிபராகவும் பணியாற்றி வருகிறார்.

தற்போது விவாகரத்து குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இதுகுறித்து மௌனி ராய் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.