சினிமா செய்திகள்

“அகண்டா 2” உடன் மோதும் “மௌக்லி 2025”

“அகண்டா 2” படம் வருகிற 12-ம் தேதி திரையரங்குகளில் வர இருக்கிறது.

தினத்தந்தி

சென்னை,

ரோஷன் கனகலா நடித்த மௌக்லி 2025 படம் வருகிற 12-ம் தேதி திரையரங்குகளில் வர இருந்தது. ஆனால் அகண்டா 2 ஒத்திவைக்கப்பட்டதாலும், அந்த படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததாலும் மௌக்லி 2025 பட தயாரிப்பாளர்கள் படத்தை காலவரையின்றி ஒத்திவைத்தனர்.

இதற்கிடையில், அகண்டா 2 வருகிற 12-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, மௌக்லி 2025 படக்குழுவும் புதிய ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளது. அதன்படி, இப்படம் 13-ம் தேதி திரைக்கு வருகிறது. 12 ந் தேதி சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலர் போட்டோ புகழ், சந்தீப் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் இளம் ஹீரோ ரோஷன் கனகலா கதாநாயகனாக நடித்துள்ளார். சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி