சென்னை,
கிருஷ்ணபலராம் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் முகேன் ராவ் மற்றும் நடிகை பிரீத்தி அஸ்ரானி ஜோடியாக நடிக்க உள்ளனர்.
தற்போது படத்தின் கேரக்டர் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, கிரிஷ் வேடத்தில் முகேனும், கீர்த்தனாவாக பிரீத்தியும் நடிக்கவுள்ளனர்.
முகேன் ராவ் கடைசியாக ''ஜின் - தி பெட்'' படத்தில் நடித்தார். டிஆர் பாலா எழுதி, இயக்கிய இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பவ்யா திரிகா நடித்தார்.
சசிகுமார் நடித்த அயோத்தி (2023) படத்தின் மூலம் முத்திரை பதித்த பிரீத்தி அஸ்ரானி, சமீபத்தில் கவினுடன் ''கிஸ்'' படத்திலும் ஷேன் நிகாமின் பல்டி படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாகவும் இயக்குனராகவும் நடிக்கும் கில்லர் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
View this post on Instagram