சினிமா செய்திகள்

நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு

மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக நடிகை நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

நடிகை நயன்தாராவின் 75-வது திரைப் படம், 'அன்னபூரணி'. ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்த இந்தப் படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்தப் படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியானது.

இதையடுத்து மும்பையை சேர்ந்த ,சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர், அன்னபூரணி படம் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் லவ்ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் கூறி, மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில், அன்னபூரணி படத்தில் இந்து மத நம்பிக்கைகளை தவறாக காட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் உள்ளிட்டோர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பட தயாரிப்பாளர் ரவீந்திரன், ஜதின் சேத்தி, புனித் கோயங்கோ உள்ளிட்டோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து