சினிமா செய்திகள்

முனீஸ்காந்த்தின் “மிடில் கிளாஸ்” படத்திற்கு “யு” தணிக்கை சான்றிதழ்

முனீஸ்காந்த், விஜயலட்சுமி நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’ படம் வருகிற 21ந் தேதி வெளியாகிறது.

தினத்தந்தி

சென்னை,

சூது கவ்வும்', முண்டாசுப்பட்டி', ஜிகர்தண்டா', டார்லிங்-2', மாநகரம்', டிடி ரிட்டன்ஸ்', கேங்கர்ஸ்' போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த். நகைச்சுவையில் அசத்தி வந்த முனீஸ்காந்த் தற்போது 'மிடில் கிளாஸ்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இப்படத்தினை தேவ் மற்றும் கே.வி.துரை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மிடில் கிளாஸ் தம்பதிகளாக முனிஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில், தணிக்கை வாரியம் மிடில் கிளாஸ் படத்திற்கு யு சான்றிதழை வழங்கியுள்ளது. இப்படம் வருகிற 21ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை