சினிமா செய்திகள்

இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

இசையமைப்பாளர் தமன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இன்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 8000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் தமன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றிய போதிலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திவிட்ட போதிலும் எனக்கு லேசான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறேன்.

என்னுடன் தொடர்பு கொண்டிருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும் தடுப்பூசி போடுமாறும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். பத்திரமாக இருங்கள்' என்று தெரிவித்துள்ளார்.

தமன் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்.கே 20' திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். நேற்று நடிகர் சிவகார்த்திகேயன், நவீன் பாலிஷேட், அனுதீப், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா என அந்த படக்குழுவினருடன் இரவைக் கழித்ததாக கூறி அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து