கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

ரசிகர்களின் அன்பு தான் என் தேடல் - நடிகை பவானி ஸ்ரீ

ரசிகர்கள் காட்டி வரும் அன்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது என்று நடிகை பவானி ஸ்ரீ கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்த ‘விடுதலை' படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் பவானி ஸ்ரீ. இவர் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமாரின் தங்கையும் ஆவார்.

சமீபத்தில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஷ்வின், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான ‘ஹாட் ஸ்பாட் 2 மச்' படத்தில் பவானி ஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

பவானி ஸ்ரீ கூறும்போது, "தமிழில் ஓரிரு படங்களே நடித்தாலும் ரசிகர்கள் என் மீது காட்டி வரும் அன்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்த அன்பு தான் கலைஞர்களை உற்சாகப்படுத்தும் விஷயமாகும். ‘ஹாட் ஸ்பாட் 2 மச்' படத்தின் வெற்றி எனக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ரசிகர்களின் அன்பு தான் என் தேடல். அதை நோக்கியே என் பயணம் இருக்கும். ரசிகர்களின் அன்புக்குரியவளாக இருக்க என் கடமையை சரியாக செய்வேன்'' என்றார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை