சினிமா செய்திகள்

'என்னிடம் கேட்பவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே என் ஆசை' - நடிகர் பாலா

உதவி கேட்பவர்களுக்கு தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என நடிகர் பாலா தெரிவித்தார்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் கிராமத்தில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா பங்கேற்றார். இந்த விழாவில் நடனமாடி, மேடையில் பேசிய அவர் மாணவர்களுக்கு அறிவுரைகூறி உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா, "ராகவா லாரன்சின் 'மாற்றம்' அமைப்பில் நானும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களில் 'மாற்றம்' அமைப்பில் என்னுடைய பங்களிப்பும் அதிகமாக இருக்கும்.

நான் கேட்டபோது யாரும் உதவவில்லை. என்னிடம் உதவி கேட்பவர்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதே என் ஆசை. இப்போது மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் உதவிகளை செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது" என்று தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து