சினிமா செய்திகள்

`நண்பன் ஒருவன் வந்த பிறகு' பட இயக்குனரின் நெகிழ்ச்சி பதிவு

நடிகர் சிவகார்த்திகேயன் நான் நடித்து இயக்கிய படத்தை பார்த்துவிட்டு பாராட்டும் போது, என்னுடைய பயணம் தொடங்கிவிட்டது என தோன்றுகிறது என்று இயக்குனர் ஆனந்த் கூறியுள்ளார்.

சென்னை,

ஹிப்ஹாப் ஆதி இயக்கிய 'மீசைய முறுக்கு' படத்தில் தனது நடிப்பு திறமையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆனந்த். இவர் தற்போது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பாளராகவும் உருவெடுத்த நிலையில் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பவானி ஸ்ரீ, மோனிகா, இர்பான் மற்றும் ஆர்.ஜே.விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான பாடல்களை தனுஷ் மற்றும் ஜி.வி பிரகாஷ் பாடியுள்ளனர். இந்த படமானது, இளைய தலைமுறையினரின் நட்பை பற்றிய கருத்தை மையமாக கொண்ட படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு சுனில் காஷிப் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

ஏற்கனவே மிர்ச்சி சிவா, ஜெய் ஆகியோர் படம் தொடர்பாக பாசிட்டிவ்வான விமர்சன வீடியோவை வெளியிட்டிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் தற்போது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படத்தை பார்த்து தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்குனர் ஆனந்த் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில் " செயல்முறையை நம்புங்கள், நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் ஒரு நாள் கண்டிப்பாக பலன் தரும். ஒரு நாள். அந்த ஒரு நாள், அந்த ஒரு நொடி எனக்கு சிவகார்த்திகேயன் அண்ணாவை பார்க்கும் போது நடந்தது. ரெமோ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்தில் நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சிவகார்த்திகேயன் அண்ணாவை ஒரு முறையாவது பார்த்திட மாட்டோமா என்ற எண்ணத்தில் சென்றேன், ஆனால் இன்றோ அவர் நான் நடித்து இயக்கிய படத்தை பார்த்துவிட்டு பாராட்டும் போது, என்னுடைய பயணம் தொடங்கிவிட்டது என தோன்றுகிறது. உங்கள் அன்புக்கு என்றும் நன்றியுடன் இருப்பே. இதற்கு காரணமாக இருந்த வெங்கட் பிரபு சார் மற்றும் தயாரிப்பாளர் ஐஷ்வர்யாவிற்கு நன்றி" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்