சினிமா செய்திகள்

நானி நடித்துள்ள 'சூர்யாவின் சனிக்கிழமை' முதல் சிங்கிள் பாடல் வெளியானது

நானி நடிப்பில் உருவாகி இருக்கும் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். நடிகர் நானி தசரா திரைப்படத்திற்கு பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ,இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து, நடிகர் நானி 31-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சூர்யாவின் சனிக்கிழமை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சரிபோதா சனிவாரம் என்ற பெயரில் வெளியாகிறது. அடேட சுந்தரா படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயே இப்படத்தை இயக்குகிறார். டிடிவி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜேக்ஸ் பிஜாய் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

ஆக்சன் கலந்த கதைகளத்தில் இப்படம் உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு