சினிமா செய்திகள்

தெலுங்கில் தடம் பதிக்கும் நர்கிஸ் பக்ரி - வெளியான கிளாமர் சாங் போஸ்டர்

நர்கிஸ் பக்ரி நடித்துள்ள ஒரு சிறப்புப் பாடலின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஐதராபாத்,

பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி, ஹவிஷ் கதாநாயகனாக நடிக்கும் 'நேனு ரெடி' (Nenu Ready) திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் தடம் பதிக்கிறார். வெற்றிப் படங்களை இயக்கிய திரிநாத ராவ் நக்கினா இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில், நர்கிஸ் பக்ரி நடித்துள்ள ஒரு சிறப்புப் பாடலின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மெழுகுவர்த்திகள் சூழ்ந்த பிர்மாண்ட பின்னணியில், வெள்ளி நிற கிளாமர் உடையில் அவர் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

ஹார்னிக்ஸ் இந்தியா எல்எல்பி பேனரின் கீழ் கொனேரு சத்யநாராயணா மற்றும் நிகிலா கொனேரு தயாரிக்கும் இத்திரைப்படத்தில் காவ்யா தாப்பர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரம்மானந்தம், ஸ்ரீலட்சுமி, வெண்ணெலா கிஷோர், முரளி சர்மா மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி இசை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் பிரமாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மிக்கி ஜே மேயர் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிஜார் ஷாபி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.