அதன்படி நடிகைகள் ரகுல்பிரீத் சிங், சார்மி, தெலுங்கு நடிகர்கள் ராணா, ரவிதேஜா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நடிகர் நவ்தீப்புக்கும் சம்மன் அனுப்பி இருந்ததால் அவரும் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
நவ்தீப்பிடம் அதிகாரிகள் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினார்கள். பல கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லாமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது. மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராகும்படி அவரிடம் அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. நவ்தீப் தமிழில் அறிந்தும் அறியாமலும், ஏகன், இளவட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.