சினிமா செய்திகள்

அஜித்துடன் பைக் பந்தயத்தில் நவ்தீப்

நடிகர் அஜித்குமார் ஓய்வு கிடைக்கும்போது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

தினத்தந்தி

நடிகர் அஜித்குமார் ஓய்வு கிடைக்கும்போது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சிக்கிம் வரை பல ஆயிரம் கிலோ மீட்டர் பைக்கில் சென்று வந்தார்.

சமீபத்தில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க ரஷியா சென்றார். அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சில நாட்கள் அங்கேயே தங்கி பைக்கில் சென்று சுற்றுலா தலங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றிப் பார்த்தார். பின்னர் இந்தியா திரும்பிய அஜித் ஐதராபாத்தில் நடந்த மோட்டார் சைக்கிள் பந்தய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த பந்தயத்தில் நடிகர் நவ்தீப்பும் பங்கேற்றார். அப்போது அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நவ்தீப் வலைத்தளத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், அன்பான மனிதர் அஜித். அவர் ஹாய் என்று சொல்லும் தொனி நிஜமாகவே நாங்கள் சந்தித்து பல ஆண்டுகள் ஆகி விட்டதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது. அவரது எளிமையும், குணமும் நல்ல அனுபவத்தை தந்தது. அற்புதமான மனிதர். அதனால்தான் அவர் தல'' என்று கூறியுள்ளார்.

அஜித்துடன் நவ்தீப் இணைந்து எடுத்து வெளியிட்ட புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். நவ்தீப் அறிந்தும் அறியாமலும் மற்றும் அஜித்துடன் ஏகன் படங்களில் நடித்து இருக்கிறார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்