சினிமா செய்திகள்

அஜித் பட வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைக்காததற்கு முக்கிய காரணம் நயன்தாராவா...!

ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்க நயன்தாரா தான் முக்கிய காரணம் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் வலுவாக உள்ளன.

தினத்தந்தி

சென்னை

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. படத்திற்கு ஏகே 62 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டது, இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

படத்திற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணியிலும் விக்னேஷ் சிவன் ஈடுபட்டார். அதன்படி வில்லனாக நடிக்க அரவிந்த சாமியை ஒப்பந்தம் செய்தார். மேலும் இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. விறுவிறுப்பாக நடந்து வந்த ஏகே 62 படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் கடந்த மாத இறுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டார். தற்போது அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி படத்தை இயக்கபோவதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் எழுதிய கதை அஜித்துக்கும் லைக்காவுக்கும் பிடிக்காததால் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது, தற்போது புதிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகிறது. விக்னேஷ் சிவன் ஏகே 62ல் இருந்து நீக்கப்பட்டதற்கு நயன்தாரா தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

ஏகே 62 படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்திருந்தார். ஆனால் திரிஷாவுக்கு கைகொடுக்குமாறு லைக்கா கேட்டபோது, இல்லை என்று விக்கி கூறியுள்ளார். பின்னர் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகைகளையும் லைக்கா பரிந்துரை செய்தது.ஆனால் அவர்கள் அனைவரையும் விக்னேஷ் நிராகரித்தார். கடைசியாக பாலிவுட் நடிகை ஒருவரிடம் சம்பளத்தை உறுதி செய்யப் போகும்போது, அதற்கும் நோ சொல்லிவிட்டார்.

விக்னேஷ் சிவன் நயந்தாராவை நாயகியை வற்புறுத்தியதைத் தொடர்ந்து, கடுப்பான லைகா நிறுவனமும், அஜித்தும் இது தீராது என்று முடிவெடுத்து விக்கியை படத்திலிருந்து நீக்க முடிவு செய்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்