சென்னை,
சினிமாவில் சமீபகாலமாக கதாநாயகிகளை முதன்மைப்படுத்தி அதிக படங்கள் வருகின்றன. இந்த படங்கள் கதாநாயகர்களுக்கு இணையாக வசூலும் குவிக்கின்றன. இதனால் நடிகைகள் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகிறார்கள். தமிழ், தெலுங்கில் 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா, தற்போது தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். சமீபத்தில் ஷாருக்கானின் 'ஜவான்' படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் குவித்தது.
தற்போது 'மண்ணாங்கட்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார். துரை செந்தில்குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கும் படங்களும் கைவசம் உள்ளன. இந்த நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை நயன்தாரா கோலிவுட்டில் 10 வருடங்களாக மேலாக கோலோச்சி வருகிறார். படத்தில் வந்து செல்லும் நாயகி கதாபாத்திரம் மட்டுமல்லாமல், நாயகியை மையப்படுத்திய பல படங்களில் நயன்தாரா நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் மட்டுமல்லாமல் ஜவான் படம் மூலம் இந்தியிலும் கால்பதித்தார் நயன். சினிமா மட்டுமின்றி ரியல் எஸ்டேட், அழகு சாதனங்கள் தொடர்பான பிஸினஸ் உள்ளிட்டபல தொழில்களையும் நயன்தாரா கவனித்து வருகிறார்.
சினிமா ஒரு பக்கம் சென்றாலும் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் ஆதரவுடன் பிஸினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் போயஸ் கார்டனில் வாங்கியுள்ள தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் கனவு அலுவலகத்தை தயார் செய்து வருகிறார் நயன்தாரா. இது தொடர்பான போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நயன்தாரா , '' எனது கனவு அலுவலகம் உருவாகிவிட்டது. 30 நாட்களுக்குள் இதனை உருவாக்கியவர்களுக்கு நன்றி' எனக் குறிப்பிட்டு அந்த அலுவலகத்தை உருவாக்கியவர்களை பாராட்டியுள்ளார்.
View this post on Instagram