சினிமா செய்திகள்

கணவர் விரும்பியதால் மீண்டும் நடிக்கும் நஸ்ரியா

திருமணத்துக்கு பின்னர் அவ்வப்போது சினிமாவில் முகத்தைக் காட்டிய நஸ்ரியா, தற்போது நேரடி தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். நஸ்ரியா தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்தும் சினிமா வாழ்க்கைகுறித்தும் பேசினார்.

தினத்தந்தி

தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, வாயைமூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நஸ்ரியா. மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். 2014-ல் மலையாள நடிகர் பகத் பாசிலை காதல் திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

இதுகுறித்து நஸ்ரியா அளித்துள்ள பேட்டியில், "நானும், பகத் பாசிலும் பெங்களூர் டேஸ் படத்தில் சேர்ந்து நடித்தோம். எங்களுக்குள் காதல் மலர்ந்தது. காதலை நான்தான் முதலில் சொன்னேன். பெற்றோரும் காதலை ஏற்றுக்கொண்டனர். திருமணம் செய்துகொண்டோம். பின்னர் பல வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். கணவர் பகத் பாசில் மீண்டும் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அதன்பிறகு கதைகள் கேட்டு நடிக்க வந்துள்ளேன். திருமணத்துக்கு பிறகும் நான் எப்போதும் போலவே மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து