சினிமா செய்திகள்

'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தின் புதிய அப்டேட்..!

கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் முதல் பாடலுக்கான புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'கான்ஜுரிங் கண்ணப்பன்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, எல்லி அவ்ரம், ஜேஸன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி ஹாரர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ,கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தின் முதல் பாடலுக்கான  புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. படத்தின் முதல் சிங்கிள் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை