சினிமா செய்திகள்

'ஸ்டார்' படத்தின் புதிய பாடலான 'ஜிமிக்கி காசல்' வைரல்

'ஸ்டார்' படத்தின் புதிய பாடலான 'ஜிமிக்கி காசல்' வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இப்படத்தின் சில பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

இந்த நிலையில், ஸ்டார் படத்தின் புதிய பாடலான 'ஜிமிக்கி காசல்' வெளியாகி உள்ளது. தற்போது இணையத்தில் இப்பாடல் வைரலாகி வருகிறது. ஸ்டார் திரைப்படம் வரும் மே 10-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை