சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் '13' படத்தின் புதிய அப்டேட்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் '13' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சமீபத்தில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் இணைந்து நடித்த 'செல்பி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் '13'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார்.

திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள '13' திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் யூடியூபர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். சி.எம். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.எப் காஸ்ட்ரோ படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, '13' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனை நடிகர் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு