சினிமா செய்திகள்

சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் புதிய அப்டேட்..!

நடிகை சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

'சாகுந்தலம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'சாகுந்தலம்' திரைப்படத்தின் டிரைலர் வருகிற ஜனவரி 9-ந்தேதி மதியம் 12.06 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

'சாகுந்தலம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...