சினிமா செய்திகள்

7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் குறித்து வெளியான புதிய அப்டேட்...!

19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது '7 ஜி ரெயின்போ காலனி' 2-ம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன.

சென்னை,

இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்கியவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற 'கண்பேசும் வார்த்தைகள்' , 'கனா காணும் காலங்கள்' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது '7ஜி ரெயின்போ காலனி' 2-ம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன.

முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவனே 2-ம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா 2-ம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் சோனியா அகர்வாலுக்கு பதிலாக 'ராங்கி' படத்தில் திரிஷாவின் அண்ணன் மகளாக நடித்த அனஸ்வர ராஜன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 7ஜி ரெயின்போ காலனி 2-ம் பாகத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆண்டுகளுக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2-ம் பாகம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.