சினிமா செய்திகள்

'பள்ளிச்சட்டம்பி' படத்திலிருந்து புதிய வீடியோ பாடல் வெளியீடு

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய இப்படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

‘ஐடெண்டிட்டி’, ‘நரிவேட்டை’, ‘லோகா’ படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை பிரபல மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1950-களின் காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தற்போது இப்படத்திலிருந்து ‘காட்டு செண்பகம்’ என்ற வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.