சினிமா செய்திகள்

“சர்வம் மாயா” படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியிட்ட நிவின் பாலி

அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ‘சர்வம் மாயா’ படம் வரும் 25-ம் தேதி வெளியாகிறது.

தினத்தந்தி

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர், நயன்தாராவுடன் இணைந்து 'டியர் ஸ்டூடன்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. எல்.சி.யுவின் பென்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

அகில் சத்யன் இயக்கத்தில் சர்வம் மாயா படத்தில் நடித்துள்ளார். மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்தினை இயக்கிய சத்தியன் அந்திகாட்டின் மகன்தான் அகில் சத்யன். இதில் நிவின் பாலியுடன் இணைந்து நடிகை பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், நிவின் பாலி சர்வம் மயா திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து