சினிமா செய்திகள்

சூரரைப்போற்று படத்தின் இந்தி ‘ரீமேக்'கை தயாரிக்கும் சூர்யா

சூரரைப்போற்று படம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட மேலும் பலர் நடித்து இருந்தனர்.

தினத்தந்தி

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட மேலும் பலர் நடித்து இருந்தனர். விமான நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து தயாரானது. சூரரைப்போற்று' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். சூர்யா கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தி பதிப்பையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். சூரரைப்போற்று இந்தி ரீமேக்கை சூர்யா தனது 2டி பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இதுகுறித்து சூர்யா கூறும்போது, சூரரைப்போற்று' திரைப்படத்துக்கு கிடைத்த அன்பும் பாராட்டும் இதுவரை பார்த்திராதது. இந்த கதையை நான் முதன்முதலில் கேட்டதில் இருந்தே இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் அதன் ஆன்மா அப்படிப்பட்டது. பிறருக்கு உத்வேகத்தை தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில், அபண்டன்ஷியா என்டெர்டெய்ன்மெண்டுடன் இணைந்து தயாரிப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது" என்றார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்