கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

நாளை ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘ஓ மணப்பெண்ணே’

ஹரிஷ் கல்யான், ப்ரியா பவானிசங்கர் நடிப்பில் உருவான ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஹரிஷ் கல்யான் நடிப்பில், அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது. இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

தெலுங்கில் 2016ம் ஆண்டு விஜய் தேவரகொன்டா நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற பெல்லி சூப்புலு திரைப்படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. தெலுங்கில் வெளியான இந்த திரைப்படத்தை தருண் பாஸ்கர் எழுதி இயக்கியிருந்தார். இதில் கதாநாயகியாக ரிது வர்மா நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஏற்கனவே 2019ம் ஆண்டு மலையாளத்தில் விஜய் சூப்பரும் பவுர்ணமியும் எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஓ மணப்பெண்ணே திரைப்படத்தை கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்; விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்; படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் மேற்கொண்டுள்ளார். அஸ்வின் குமார், அன்புதாசன், வேணு அர்விந்த், அனிஷ் குருவில்லா உள்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடித்த கசட தபற படமும் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்