சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் 70-வது பிறந்த நாள்: பிரபலங்கள் சிரஞ்சிவி, மோகன் லால், சச்சின் தெண்டுல்கர், சிவகார்த்திகேயன் வாழ்த்து

ரஜினிகாந்த் 70-வது பிறந்த நாளையொட்டி பிரபல நடிகர்கள் சிரஞ்சிவி, மகேஷ்பாபு, மோகன் லால், துல்கர் சல்மான் , சிவகார்த்திகேயன் மற்றும் நடிகைகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

சென்னை

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.  அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் இல்லம் முன் ஏராளமான ரசிகர்களும், ரசிகைகளும்  குவிந்ததால்  ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ரஜினிகாந்த் தனது அரசியல் திட்டங்களை உறுதியாக அறிவித்த பின்னர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது. அவருக்கு தலைவர்கள்- பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

ரஜினிகாந்த்துக்கு  பிரபல தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சிவி, மகேஷ் பாபு, மலையாள நடிகர்கள் மோகன்லால், துல்கர் சல்மான், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர்,நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, நடிகைகள், கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்