சினிமா செய்திகள்

'ஒருமுறை படப்பிடிப்பை விட்டு ஓடிப்போய் விட்டேன்'- நடிகை ஸ்ரேயா

நடிகையாக அறிமுகமான ஆரம்ப நாட்களில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டதாக ஸ்ரேயா கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழில் குறுகிய காலத்தில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், விஷால், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா. தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

திருமணமாகி பெண் குழந்தைக்கு தாயான நிலையிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரேயா அளித்துள்ள பேட்டியில், "நான் நடிகையாக அறிமுகமான ஆரம்ப நாட்களில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டேன். ஒருமுறை படப்பிடிப்பை விட்டு ஓடிப்போய் விட்டேன்.

'கந்தசாமி' படத்தில் நடித்தபோது ஒரு காட்சிக்காக நிறைய டேக் எடுத்தார்கள். ஆனால் ஹீரோ விக்ரம் பொறுமையாக என்னோடு நடித்தார். அதை எப்போதும் மறக்கவே முடியாது.

அதேபோல ரஜினிகாந்துடன் 'சிவாஜி' படத்தில் நடித்தபோது அவர் எனக்கு பல நல்ல ஆலோசனைகளை வழங்கினார்.

நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். சக்சஸ்புல் படங்கள் செய்கிறீர்கள். நாளை இந்த நிலைமை மாறிவிடலாம். தோல்விகளை கூட சந்திக்க வேண்டி வரும். இருந்தாலும் ரசிகர்களோடு மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். அவர்களோடு அன்பாக இருங்கள் என்று ரஜினி எனக்கு அறிவுரை சொன்னார். இப்போதும் அதை நான் கடைபிடிக்கிறேன்'' என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்