சினிமா செய்திகள்

சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு: மன்னிப்பு கேட்ட நடிகை

சமீபத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தலா அளித்த ஒரு பேட்டியில் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து ஊர்வசி ரவுத்தலா மன்னிப்பு கேட்டார்.

தினத்தந்தி

தமிழில் வெளியான 'தி லெஜெண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்த ஊர்வசி ரவுத்தலா இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஊர்வசி ரவுத்தலாவுக்கும், இந்திய கிரிகெட் வீரர் ரிஷப் பண்டுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வந்தன. சமீபத்தில் ஊர்வசி ரவுத்தலா அளித்த பேட்டியில், ரிஷப் பண்ட் தன்னை பார்க்க வந்து பலமணி நேரம் காத்து இருந்ததாகவும், நான் சோர்வாக இருந்ததால் அவரை சந்திக்கவில்லை என்றும் மறைமுகமாக பேசி இருந்தார். இதனால் அதிர்ச்சியான ரிஷப் பண்ட் ரசிகர்கள் ஊர்வசி ரவுத்தலாவை கடுமையாக எச்சரித்தனர். ரிஷப் பண்டும் கோபமாகி தனது இன்ஸ்டாகிராமில், ''வெற்று விளம்பரத்திற்காக சிலர் பொய்களாக பேசுகின்றனர். அவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று ஊர்வசி ரவுத்தலாவை கண்டித்து பதிவு வெளியிட்டு பின்னர் அதை நீக்கினார். இந்த நிலையில் ரிஷப் பண்டுடனான சர்ச்சை குறித்து ஊர்வசி ரவுத்தலாவிடம் கேள்வி எழுப்பியபோது, ''நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் என்னை மன்னிக்கவும்" என்று கூறினார். ஊர்வசி மன்னிப்பு கேட்டதால் இருவருக்குமான மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு