சினிமா செய்திகள்

ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் மரணம்

தினத்தந்தி

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆலன் ஆர்கின். இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா கார்ஸ்பாத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே ஆலன் ஆர்கின் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.

ஆலன் ஆர்கின் மரணம் அடைந்த தகவலை அவரது மகன்கள் ஆடம், மேத்யூ, அந்தோணி ஆகியோர் அறிக்கை மூலம் தெரிவித்து உள்ளனர். ஆலன் ஆர்கின் 2006-ல் வெளியான லிட்டில் மிஸ் சன்ஷைன் என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில படங்களில் நடித்தற்காகவும் நான்கு முறை ஆஸ்கார் விருதுக்கு பிரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.

எண்டர் லாபிங், தி ரஷியன் ஆர் கம்மிங், தி ஹாட் இஸ் எ லோன்லி ஹண்டர், கேட்ச் 22, வேல்ட் அண்டில் டார்க் உள்பட நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நகைச்சுவை, குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். தி கோமின்ஸ்கி மெதட் என்ற வெப் தொடரில் மைக்கேல் டக்ளசுடன் இணைந்து நடித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து