சினிமா செய்திகள்

”நமது வாழ்க்கை வேறு, மற்ற ஜோடிகள் போலல்லாமல்” கங்கனாவுக்கு ஹிருத்திக் அனுப்பிய மின்னஞ்சல்

”நமது வாழ்க்கை வேறு, மற்ற ஜோடிகள் போலல்லாமல்” கங்கனாவுக்கு ஹிருத்திக் அனுப்பிய மின்னஞ்சல் தங்கை ரங்கோலி சண்டேல் வெளியிட்டார்.

மும்பை,

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், நடிகை கங்கனா ரணாவத்தும் தீவிரமாக காதலித்து வந்ததாக கிசுகிசு பரவியது. இதன் காரணமாகவே ஹிருத்திக் ரோஷன் தனது காதல் மனைவி சுசன்னேவை கடந்த 2013ம் ஆண்டில் விவாகரத்து செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஹிருத்திக் ரோஷனும், கங்கனா ரணாவத்தும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கங்கனா ரணாவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஹிருத்திக் ரோஷனின் பெயரை குறிப்பிடாமல், தன்னுடைய முட்டாள்தனமான முன்னாள் காதலர், தங்களது தனிப்பட்ட இமெயில் அரட்டைகளை ஊடகங்களில் வெளியிட்டு தன் மீது சேற்றை வாரி அடிப்பதாக குற்றம்சாட்டினார்.

இதனால், ஹிருத்திக் ரோஷன் கங்கனா ரணாவத் இடையிலான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. மேலும், ஒருவருக்கொருவர் மாறி, மாறி வக்கீல் நோட்டீசு அனுப்பி கொண்டதால், திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், இதுபற்றி ஹிருத்திக் ரோஷன் தனிப்பட்ட முறையில் கருத்து ஏதும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில், அவர் முதன்முறையாக மவுனம் கலைத்திருக்கிறார். கங்கனா ரணாவத்துடன் காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்படுவதை சுட்டிக்காட்டி, அவரது பெயரை குறிப்பிடாமல் பரபரப்பு அறிக்கை ஒன்றை அவர் நேற்று வெளியிட்டார். அதில் 

அந்த பெண்ணுடன் நான் படங்களில் நடித்து இருந்தாலும், அவரை தனிமையில் ஒருபோதும் சந்தித்தது கிடையாது. 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் பாரீஸ் நகரில் எங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இதுபற்றிய புகைப்பட ஆதாரங்களோ, சாட்சிகளோ, நினைவுக்குறிப்புகளோ எதுவும் இல்லை. மேலும், அந்த தருணத்தில் நான் நாட்டை விட்டு வெளியே எங்கேயும் செல்லவில்லை என்பதற்கு என்னுடைய பாஸ்போர்ட் விவரங்கள் ஆதாரம்.

இந்த அத்தியாயத்தில் பாதிக்கப்பட்டது நான் தான். என்னுடைய நற்பெயரை காப்பாற்றி கொள்ள தான் நான் போராடுகிறேனே தவிர, காதல் பிரச்சினைக்காக அல்ல. ஆகையால், இதனை காதல் பிரச்சினையாக ஊடகத்தினர் அணுக வேண்டாம். இவ்வாறு ஹிருத்திக் ரோஷன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கங்கனா ரணாவத் தங்கை ரங்கோலி சண்டேல் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு எதிராக பல தகவல்களை கூறி உள்ளார். கங்கனா சகோதரி  ஹிருத்திக்   கங்கனாவுக்கு அனுப்பிய மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட் பகிர்ந்து உள்ளார்.

ஹிருத்திக் தனது மடிக்கணினியை  தனியார் தடயவியல் புலன்விசாரணை க்கு கொடுக்க வேண்டும்  அவர் அதற்கு பணம் கொடுக்கவில்லை என்றால் நான் கொடுக்கிறேன். நீங்கள் கூறிய கூறிக்கையில் கங்கானா வெளியிட்ட படம் போட்டாஷப் செய்யபட்டதுஎன கூறி உள்ளார்.

இந்த படத்தை பற்றி பேசுகிறீர்கள் என்றால் யார் அதை வெளியிட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் போட்டோஷாப் என சொல்கிறீர்கள்?கங்காணனின் இடுப்பையும் , கழுத்துப் பளபளப்பையும்  பிடித்து இருப்பது  யார்?

உங்கள் முன்னாள் மனைவி அங்கு இருந்தால் அவருக்கு பல தொடர்புகள் இருந்தன ஆனால் எனக்கு தெரியாது வதந்திகளாக கூட இருக்கலாம்  பல விவகாரங்களில் இருந்து உங்கள் மனைவியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. நீ அவளை எப்போதும் ஏன் மறைக்கிறாய்?

கங்கான குறித்து ஹிருத்திக் போலி செய்திகளை பரப்பி வருகிறார்.

ஹிருத்திக்  3 வழக்கறிஞர்கள் மற்றும் அவரது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார், இப்போது கங்கானா மனநிலை பாதிக்கப்பட்டவர் எனறு அவரது புதிய இலக்காக இருக்கிறது. என கூறி உள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...