சினிமா செய்திகள்

வெள்ளித்திரையில் ஹீரோவாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் குமரன் தங்கராஜன் ‘லக்கி மேன்’ பட இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கும் புதிய படத்தில் நடித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

விஜய் டி.வி.யில் வெளியான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உட்பட சில சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் குமரன் தங்கராஜன். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை 'யாத்திசை' தயாரிப்பாளர் வீனஸ் இன்போடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் தயாரிக்கிறார்.

நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இந்தப் புதிய படத்தை இயக்குகிறார். இவர் யோகி பாபுவை வைத்து 'லக்கி மேன்' என்ற காமெடி படத்தை இயக்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் குமரவேல், ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். "அனைத்து தரப்பினரும் ரசித்து, சிரித்து மகிழும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. படத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும்" என்கிறது படக்குழு

சிவகார்த்திகேயன், கவின் உட்பட பல சின்னத்திரை நடிகர்கள் பெரிய திரையில் அறிமுகம் ஆகி வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த வரிசையில் குமரனும் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவாக வருவார் என்று கூறப்பட்டு வருகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு