சினிமா செய்திகள்

போண்டா மணியிடம் கூடவே இருந்து குழிபறித்த நபர்...! உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சம் மோசடி

உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை:

ரஜினிகாந்த், விஜய் உள்பட்ட நடிகர்களுடன் சேர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் போண்டா மணி (வயது 59). இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டார். 2 சிறுநீரகங்களும் செயலிழந்ததால் சென்னை அரசு ஓமந்தூரார் பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தமிழக் அரசு மற்றும் நடிகர்கள் என பல்வேறு தர்ப்பினர் உதவி செய்தனர்.

நடிகர் போண்டா மணி சிகிச்சையில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு உதவுவது போல் ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் பழகி வந்தார். நடிகர் போண்டா மணியின் மனைவி மாதவி மருந்து வாங்கி வர கொடுத்த ஏடிஎம் கார்ட் மூலம் ராஜேஷ் பிரித்தீவ் நகை வாங்கி மோசடி செய்துள்ளார்.ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.1 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...