சினிமா செய்திகள்

வெளிநாட்டில் படமாகிறது: அஜித்தின் ‘வலிமை’ படத்தில் ‘பைக் ரேஸ்’

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் இடம்பெற உள்ள ‘பைக் ரேஸ்’ வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது

தினத்தந்தி


நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இதற்காக உடற்பயிற்சிகள் செய்து தோற்றத்தை இளமையாக மாற்றி இருக்கிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் முடித்துள்ளனர். அடுத்து சென்னையில் படப் பிடிப்பை நடத்த உள்ளனர். இதற்காக ஸ்டூடியோவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. வலிமை படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் விவரத்தை ரகசியமாக வைத்துள்ளனர். கதாநாயகி யார்? என்றும் தெரிவிக்கவில்லை. கியூமா குரோஷி கதாநாயகியாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவர் ஏற்கனவே காலா படத்தில் ரஜினியுடன் நடித்து இருந்தார்.

வலிமை படத்தில் அஜித்துக்கு பிடித்தமான பைக் மற்றும் கார்பந்தய காட்சிகள் இடம்பெறுகின்றன. இந்த காட்சிகளை சுவிட்சர்லாந்தில் படமாக்க உள்ளதாகவும், இதற்காக தயாரிப்பாளர் போனிகபூர் அந்த நாட்டுக்கு சென்று சிறப்பு அனுமதி வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை படப்பிடிப்பு முடிந்ததும் வட இந்தியா சென்று முக்கிய காட்சிகளை படமாக்குகிறார்கள். அதை முடித்து விட்டு பைக், கார் பந்தைய காட்சிகளை படமாக்க அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் சுவிட்சர்லாந்து புறப்பட்டு செல்கிறார்கள்.

வலிமை படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்