சென்னை,
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடகி பி.சுசீலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பி.சுசீலா பாடியுள்ளார்.