சினிமா செய்திகள்

ஆன்லைன் கேமில் ஆபாச மெசேஜ்... அக்சய் குமாரின் மகளுக்கு தொல்லை கொடுத்த நபர் கைது

ஆபாச மெசேஜ் அனுப்பிய நபரை, மகாராஷ்டிரா சைபர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் 13 வயது மகள் நிதாராவுக்கு ஆன்லைன் கேமிங் தளத்தில் ஆபாச மெசேஜ் அனுப்பிய நபரை, மகாராஷ்டிரா சைபர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர்-ல் அக்சய் குமார் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது மகளுக்கு நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

நிதாரா ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஒரு மர்ம நபர் அவரிடம் பாலியல் ரீதியான புகைப்படங்களை கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். உடனடியாக நிதாரா தனது தாய் டிவிங்கிள் கன்னாவிடம் தெரிவித்துள்ளார்.

Also read: லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு

இதையடுத்து அக்சய் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், மகாராஷ்டிரா சைபர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு மூலம் தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.