சினிமா செய்திகள்

பொன்ராமின் “வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2” படத்தின் அப்டேட்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ 2-ம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் கொம்புசீவி. வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக அளித்த பேட்டியில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். இது இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பேட்டியில் இயக்குநர் பொன்ராம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2-ம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கான கதையும் தயாராக உள்ளது. சிவகார்த்திகேயனின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை மனதில் வைத்து கதையில் சில மாற்றங்களை செய்து வருகிறேன். அனைத்தும் தயாரானவுடன், சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டால் அப்படத்தினை தொடங்குவோம். அடுத்ததாக முழுக்க காமெடியை முன்னிலைப்படுத்தி படமொன்றை இயக்கி வருகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். 

பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணி இணைந்து ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் சீமராஜா ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. இத்திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்