சினிமா செய்திகள்

பூஜா ஹெக்டே நீண்ட சுற்றுப்பயணம்

நடிகை பூஜா ஹெக்டே நீண்ட சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். பல்வேறு நாடுகளில் ஒரு மாதம் சுற்றுலா செல்ல இருக்கிறார்.

தினத்தந்தி

தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமாகி பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த பூஜா ஹெக்டே தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் ரன்வீர் சிங்குடன் 'சிர்கஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சல்மான் கான் ஜோடியாக 'கபி ஈத் கபி தீவாளி' படத்தில் தற்போது நடித்து வருகிறார். தெலுங்கில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாகவும் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே நீண்ட சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். பல்வேறு நாடுகளில் ஒரு மாதம் சுற்றுலா செல்ல இருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள பதிவில், '3 கண்டங்கள், 4 நகரங்களுக்கு ஒரு மாதம் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். மும்பையில் இருந்து பாங்காக் விமானத்தில் ஏறும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை