சினிமா செய்திகள்

பட வாய்ப்பை தவறவிட்ட பூஜா ஹெக்டே புலம்பல்

துல்கர் சல்மானுடன் நடித்து இருந்தால் இந்நேரம் வேறு லெவலில் இருந்திருப்பேன் என்று தனது நண்பர்களிடம் பூஜா ஹெக்டே புலம்பி வருகிறாராம்.

தினத்தந்தி

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'முகமூடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் ஆர்வமாக நடித்து வந்தார்.

பிரபாசுடன் நடித்த 'ராதே ஷ்யாம்', விஜய்யுடன் நடித்த 'பீஸ்ட்' போன்ற படங்களும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு ஓய்வெடுத்து வந்தார். அந்த சமயம் 'சீதா ராமம்' படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததால், அவரால் நடிக்க முடியாமல் போனது.

சமீபத்தில் திரைக்கு வந்த 'சீதா ராமம்' வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக மிரினல் தாக்கூர் நடித்திருந்தார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

இந்தநிலையில், ''அந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து இருந்தால் இந்நேரம் வேறு லெவலில் இருந்திருப்பேன். இனி அப்படி ஒரு வாய்ப்பு வருவது கடினம் தான்'' என்று தனது நண்பர்களிடம் பூஜா ஹெக்டே புலம்பி வருகிறாராம்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை